பஞ்சாயத்து தலைவர்கள் பச்சை நிற மை பயன்படுத்த அதிகாரம் இல்லை: விதி மீறுவோர் மீது நடவடிக்கை?
பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் விதிகளை மீறி 'பச்சை' மையில் கையெழுத்து போடுகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்து தெளிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 15 மாநகராட்சிகள் 121 நகராட்சிகள் 528 டவுன் பஞ்சாயத்துகள் 385 ஒன்றியங்கள் 12 ஆயிரத்து 618 ஊராட்சிகள் உள்ளன. மாநகராட்சி மேயர் நகராட்சி டவுன் பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி தலைவர்கள் அலுவலக கோப்புகள் சிபாரிசு கடிதங்களுக்கு பச்சை மை பேனாவில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
மேலும் தங்கள் சட்டை பாக்கெட்டில் பச்சை மை பேனாவை வைத்துக் கொள்கின்றனர்; அதை கவுரவமாக நினைத்துக் கொள்கின்றனர்.
இவர்கள் பச்சை மையில் கையெழுத்து போடுவதற்கு அதிகாரம் உள்ளதா என செப். 9ல் நாகப்பட்டினத்தை சேர்ந்த வக்கீல் சபரிகீரிஸ்வரன் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றுள்ளார்.
அதில் 'ஊராட்சி தலைவருக்கு பச்சை நிற மையால் கையெழுத்திடும் அதிகாரம் இல்லை. அவ்வாறு கையெழுத்திட்டால் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்யலாம்' என தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவல் வைரலாகி வருவதால் இதுபோன்ற புகார் தொடர்பாக எப்படி நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறியதாவது:
பச்சை நிற மை பயன்படுத்தக் கூடாது என 2010 அக். 21ல் வெளியிடப்பட்ட அரசாணை எண்: 151ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுபோல 2007 ஜூலை 18ல் வெளியிடப்பட்ட அராசணை எண்: 189ல் 'அ' மற்றும் 'ஆ' நிலை அலுவலர்கள் மட்டுமே பச்சை நிற மையில் சான்றொப்பம் இடுவதற்கு பயன்படுத்தலாம் என ஆணையிட்டுள்ளது.
மேலும் பச்சை நிற மை பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி 2020 பிப்ரவரியில் அனைத்து மாவட்ட ஊரக உள்ளாட்சி பிரநிதிகளுக்கும் அரசாணைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறினர்.
பஞ். தலைவர்கள் கூறியதாவது:
பச்சை மை பயன்படுத்துவது குறித்து அரசாணை சுற்றறிக்கை உள்ளது உண்மை தான். ஆனால் ஊராட்சி திட்டப்பணிகளுக்கு வங்கியில் செலுத்தும் காசோலைகளில் ஊராட்சி தலைவரின் கையெழுத்து பச்சை மையில் இருந்தால் தான் ஏற்றுக் கொள்கின்றனர்.
வேறு நிற மையில் கையெழுத்து இருந்தால் காசோலைகளை அனுமதிப்பதில்லை. அதனால் தான் ஊராட்சி தலைவர் பச்சை மையை பயன்படுத்த வேண்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு புதிதாக உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே தீர்வு காண முடியும்.
இவ்வாறு கூறினர்.
இதை, இதுவரை யாரும் ஏன் என்று கேட்கவில்லை. கேள்வி கேட்க ஆள் இல்லாததால் இதை யாரும் கண்டுக்கொள்ளவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. ஆனால் இப்போது ஜாபர் சாதிக் என்பவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த தகவலை கேட்டு பெற்றுள்ளார்.
இதற்கு கிடைத்த பதில் என்ன தெரியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பச்சை மையில் கையெழுத்து இடும் அதிகாரம் பெற்றுள்ளார்கள்.
உள்ளாட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கபடுகின்ற தலைவர்களுக்கோ, மாவட்ட, ஒன்றிய, வார்டு உறுப்பினர்களுக்கோ, அவ்வளவு ஏன் சட்டமன்ற உறுப்பினருக்கே பச்சை மையில் கையெழுத்து இடும் அதிகாரம் இல்லையாம்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர்
மேலும் அறிய இணைத்திடுங்கள் ( LINK BELOW)
டெலிக்ராம் - https://t.me/+SXMfwEhx2FdmODRl
வாட்ஸாப்ப் - https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK
பேஸ்புக் - https://www.facebook.com/profile.php?id=100084805683410

0 Comments