கிராம சபை கூட்டம் தொடர்பான தகவல்கள் பெற மாதிரி தகவல் மனு-


தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரும் மனு.

அனுப்புதல்:
பிரகாஷ் த/பெ, ராஜேஸ்வரன்,
இந்திய குடிமகன் 5/152, தீர்த்தார அள்ளி (கிராமம்), பி.செட்டி அள்ளி (அஞ்சல்), பாலக்கோடு (வட்டம்), தருமபுரி (மாவட்டம்).
அ.எண்: 636808.

பெறுதல்:
 பொது தகவல் அலுவலர் அவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பாலக்கோடு.- 636808.

அன்புடையீர் வணக்கம்:

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பின்வரும் தகவல்களை வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் பி.செட்டி அள்ளி கிராம ஊராட்சியில் 02.10.2022- ல் நடைபெற்ற கிராம சபை கூட்டம் தொடர்பான பின்வரும் தகவல்கள் தேவை.

1. கிராம சபை கூட்ட அறிவிப்பு நகல் தேவை

2. கிராம சபை கூட்டத்திற்கு வெளியிடப்பட்ட துண்டுபிரசுரம் (பிட் நோட்டீஸ்) சுவரொட்டி (போஸ்டர்) ஆகியவற்றின் நகல் தேவை.

3. கிராம சபை கூட்டத்திற்கு எந்த எந்த இடங்களில் டாம் டாம் (தன்டோரா) போடப்பட்டது என்ற தகவலும் தன்டோரா போட்டவர்கள் பெயர் அவருக்கு செய்யப்பட்ட செலவு, வழங்கப்பட்ட கூலி எவ்வளவு என்ற தகவல்கள் தேவை.

4. கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கிராமசபை கூட்ட அறிவிப்பு எந்த வகையில் வழங்கப்பட்டதோ அதன் நகல் தேவை.

5. அரசின் பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் அவர்களில் யார் யாருக்கு என்ன வகையில் அழைப்பு விடுக்கப்பட்டது என்ற விபரங்கள் தகவலாக தேவை.

6. கிராம சபை கூட்டம் நடைபெற்ற இடத்தை சுத்தம் செய்ய எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது என்ற தகவல் தேவை.

7. கிராம சபை கூட்டம் நடைபெற்ற இடத்தில் பயன்படுத்தப்பட்ட பந்தல், டேபிள் சேர் தரைவிரிப்புகள் சானிட்டைசர் கிருமிநாசினி டீ காபி சிற்றூன்டி, தண்ணீர் பாட்டில்கள் ஒலிபெருக்கி (மைக்செட்) ஆகியவற்றிற்கு ஒவ்வொரு இனத்திற்கும் செலவு செய்யப்பட்ட செலவு தொகை எவ்வளவு என்ற தகவலும் அவற்றின் இரசீது நூல்களும் தகவலாக தேவை.

8. கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள தகவல்களை உயர் அலுவலர்களுக்கு எந்த வகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது என்ற விபரங்களும் அவற்றின் நகல்களும் தகவலாக தேவை.

9. கிராம சபை கூட்ட அறிவிப்பு, கிராம சபை கூட்ட வருகை பதிவேடு, கிராம சபை கூட்ட மினிட் நோட்புக், கிராம சபை கூட்டத்தில் வெளியிட வரவு செலவு கணக்குகள், கிராம சபை கூட்டத்தில் பார்வைக்கு வைக்க பதிவேடுகள் ஆகியவற்றை வாங்குவதற்கு ஜெராக்ஸ் நகல் எடுக்க அச்சிட செலவு செய்த தொகை விபரங்கள் இனம் வாரியாக தேவை இரசீது நகல் தேவை

10. கிராமசபை கூட்டத்தில் எழுதப்பட்ட தீர்மானத்தின் நகல்கள் தேவை.

தகவல் மனு கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண ஓட்டு வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன். எனவே ஷை தகவல்களை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.

                    தங்கள் உண்மையுள்ள
                            பிரகாஷ்

இடம்: தீர்த்தார அள்ளி
நாள்: 03 .10.2022

தொடர்பு முகவரி:

பிரகாஷ்
(பி.செட்டி அள்ளி
ஊராட்சியின் கிராம சபை உறுப்பினர்)