குற்றம் நடைபெறுவதை தடுக்காத அரசு ஊழியருக்கு, நடைபெற்ற குற்றத்திற்கு கிடைக்கும் அதிகபட்ச தண்டனையில் பாதி தண்டனையாமே.!
உங்களுக்கு தெரியுமா.?
ஆமாம், குற்ற விசாரணை முறை விதி 36 இன்படி, காவல் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும், தான் ஊழியம் செய்யும் வட்டாரத்தில் குற்றம் எதுவும் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டிய கடமைப் பொறுப்பு இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு கிராமத்திலும் எந்த விதமான குற்றமும் நடைபெறாமல் தடுக்க வேண்டிய ஊழியப் பொறுப்பு அக்கிராம நிர்வாக ஊழியருடையது என, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலின் அத்தியாயம் 3, பிரிவு 2இல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்கிராமத்தில் வசிக்கும் குடிமக்களுக்கும், இதில் பொறுப்புண்டு என்பதால்தான்,
கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடை முறைநூல்
என பெயரிடப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும்.
இப்படிக் குற்றம் நடைபெறாமல் தடுக்கவேண்டிய அரசூழியர்கள், அதனைத் தடுக்காததன் விளைவாக இந்தியத் தண்டனைச் சட்டப்படி அல்லது வேறு தண்டனைச் சட்டப்படி நடந்துள்ள குற்றத்திற்காகக் குற்றமிழைத்த நபரைத் தண்டிக்கும் போது, இந்தியத் தண்டனைச் சட்டம் 1860இன் பிரிவு 119இன்படி, அக்குற்றத்தைத் தடுக்காது கடமை தவறிய அரசூழியருக்குக், குற்றவாளிக்கு விதிக்கும் அதிகபட்சத் தண்டனையில், பாதித் தண்டனையை கட்டாயம் விதிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது.
அரசூழியர்களுக்கும், நிதிபதிகளுக்கும் இதனை எடுத்துச் சொன்னாலே, நமக்கெதற்கு வீண்வம்பு என அவரவர்களும் சட்டப்படிச் செய்யவேண்டிய வேலையைச் செய்து விடுவார்கள்.
ஆனால், எனக்குத் தெரிய இச்சட்டப்பிரிவின்படி, ஓர் அரசூழியருக்குக் கூடத் தண்டனை விதிக்கப்பட்டதில்லை என்பதற்கு வக்கீழ் தொழில் செய்பவர்களே மூலக்காரணம், எப்படி?
பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய அரசூழியர்களை வழக்கில் சேர்த்துத் தண்டிக்க ஆரம்பித்து விட்டால், பின் பிரச்சினையே இல்லாமல் தமக்கு வருமானம் போய் விடுமே. பின் நம் நாறிய பிழைப்புக்கு எங்கே போவது என்பதற்காகவேதான், திட்டமிட்டு அரசூழியர்களை வழக்கு நடவடிக்கையில் சேர்க்காமலும், தீர்வு காணாமலும் வழக்கை வாழ்நாள் முழுவதும் இழுத்தடித்து, பெரியார் கூறிய ஈனப்பிறவிகள் தங்கள் நாறியப் பிழைப்பை நடத்துகிறார்கள்.
அரசூழியர்கள், வக்கீழ்
மற்றும் நிதிபதிகள் என்றாலே, அசுரபலம் வாய்ந்தவர்கள் என்கிற அற்ப எண்ணம் சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத ஒவ்வொரு மக்களிடமும் நிறைந்திருக்கிறது.
இதனால், சட்டமென்பது நமக்குக் கட்டாயமன்று மக்களுக்கு மட்டுமே கட்டாயமென்று நினைக்கும் வக்கீழ் பொய்யர்கள், அரசு மற்றும் பொது ஊழியர்களைப் போல, மக்களாகிய நீங்களும் நினைக்கிறீர்கள்.
உங்களது பிரச்சினையைத் தூண்டி விட்டு, குற்றத்தைத் தடுக்க முயலாத மற்றும் பிரச்சினையைத் தீர்த்து வைக்காத ஊழியர்களை வழக்கு நடவடிக்கையில் சேர்க்காமலும், சிறையில் தள்ளி வேலையை இழக்கச் செய்யாமலும் விடுவதே மடத்தனம் என்றால்,
ஊழியத்தில் கடமை தவறி அரசூழியர்கள் செய்யும் குற்றங்களுக்கு, அவர்கள் மீது உயரிய தண்டனைச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளாமல், அயோக்கிய ஊழியர்களைக் காக்க, கண்துடைப்புக்காகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோராமல், இவ்வெற்றுச் சம்பிரதாய நடவடிக்கையைத் துவக்குவதற்கு முன்பாகவே, தற்காலிகப் பணிநீக்கம் அல்லது பணிநீக்கம் செய்ய வேண்டுமென்று, சமூக ஆர்வலர் என்கிற பெயரில் வெத்துவேட்டு ஆர்வக்கோளாருகள் ஆதரவுக்குரல் எழுப்புவது மடத்தனத்தின் உச்சகட்டம்.
நீங்க எப்படி?
இதையெல்லாம் உங்க சங்கமோ, வக்கீழ் சொல்லித்தரவும் மாட்டாங்க, செஞ்சித்தரவும் மாட்டாங்க.. நீங்க கேட்டாலும் அது அப்படி, இது இப்படின்னு உங்களையே குழப்புவாங்க. சந்தேகமிருந்தா முயற்ச்சிபண்ணி பாருங்க. உதாரணத்துக்கு நம்ம சேனல்ல பதிவு 55ல இருக்குற இரண்டு பதிவையும் நல்லாபாருங்க.
கீழ் கண்ட இணைப்பைத் தொட்டு நமது சேனலில் இணைந்து இன்னும் அதிக விழிப்புணர்வு பெறலாம்.
டெலிக்ராம் - https://t.me/+SXMfwEhx2FdmODRl
வாட்ஸாப்ப் - https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK
பேஸ்புக் - https://www.facebook.com/profile.php?id=100084805683410

0 Comments