தகவல் அறியும் உரிமைச் சட்டம்


இச்சட்டத்தின் மூலம் இந்திய மக்கள் பொது அதிகார அமைப்பிடமிருந்து தேவையான தகவல்களைப் பெற முடியும்.

பொது அதிகார அமைப்பின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும் உரிய பொறுப்பை ஏற்படுத்தவும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

இது 12.10.2005ல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் அரசு தொடர்பான நடவடிக்கைகளை சாதாரண கடைக்கோடி இந்தியனும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே.

இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது. ஆனால் கடந்த 6–8–2019ல் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தின் மூலம் அந்த யூனியன் பிரதேசமும் இதனுள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஜம்மு காஷ்மீருக்கு என தனி தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருந்தது. ஜம்மு காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதால் அதன் சட்டம் நீக்கப்பட்டுவிட்டது.

இச்சட்டத்தில் கூறப்பட்ட பொது அதிகார அமைப்பு என்பது நிர்வாகம், நீதித்துறை & சட்டமன்றம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இதில் அரசால் நிர்வகிக்கப்படும் / நிதியுதவி வழங்கப்படும் நிறுவனங்களும் இச்சட்டத்தின் வரையறைக்குள் அடங்கும். (95% நிதியுதவி)

பொது அதிகார அமைப்புகள் தங்களிடம் உள்ள தகவல்களை வரிசைப்படுத்தி கணினிமயமாக்கப்படும்.

தகவல் கோர மனுதாரர் எக்காரணத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

இச்சட்டப்படி ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.

தகவல் கோரி பெறப்பட்ட மனுவுக்கு 30 நாட்களுக்குள் அத்துறை சார்ந்தோர் தகவல் அளிக்க வேண்டும்.

ஒருவேளை தகவல் தனது துறை சார்ந்ததாக இல்லாதபோது அம்மனுவை 5 நாட்களுக்குள் உரிய துறைக்கு அனுப்ப வேண்டும்.

3 வது நபர் தகவல் தொடர்பானவற்றுக்கு உரிய காரணங்களுடன் 15 நாட்கள் கால அவகாசம் பெறலாம்.

இச்சட்டப்படி ஒருசில தகவல்களை வழங்க முடியாது

நாட்டின் இறையாண்மை & ஒற்றுமையை பாதிப்பது தொடர்பான தகவல்கள்

பொருளாதாரம் & அறிவியல் தொடர்பான தகவல்கள்

உரிய நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல்கள்

3வது நபரின் வணிக ரகசியம், அறிவு சார்ந்த தகவல்கள்

பாராளுமன்ற, சட்டமன்றத்தின் சிறப்புரிமைகளை பாதிக்கும் தகவல்கள்

பிற நாடுகளிடமிருந்து பாதுகாப்பாக பெறப்பட்ட தகவல்கள்.

சட்டத்தைப் பாதுகாக்கும் அமைப்பிடமுள்ள தகவல்

குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளை பாதிக்கும் வகையான தகவல்கள், இவற்றை வழங்க முடியாது.

அமைச்சரவை குழுவின் முடிவுகளை செயல்படுத்தாத வரை தகவல் வழங்க முடியாது.

தமிழக அரசுத் துறையிலிருந்து தகவல் பெற ரூ.10 உம், நகல் கட்டணமாக ரூ.2 / பக்கமும் செலுத்த வேண்டும்.

வங்கி வரைவோலையாகவும், நீதிமன்ற இரசீது செலுத்தலாம்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்குக் கட்டணம் இல்லை.

இத்தகவல்கள் கீழ்க்கண்ட வடிவுகளில் இருக்கலாம்.

பதிவேடுகள்

ஆவணங்கள்

குறிப்பாணைகள்

மின்னஞ்சல்கள்

கருத்துக்கள்

அறிவுரைகள்

சுற்றறிக்கை

செய்தி வெளியீடு

ஆணை

ஒப்பந்தம்

முடிவுகள்

மாதிரிகள்

உருமாதிரிகள்

மின்னணு வடிவிலுள்ள தகவல்கள் பொது அதிகார அமைப்பிடம் உள்ள 3வது நபர் குறித்த தகவல்கள்.

பதிவேடு - கோப்புகள், ஆவணங்கள், கையால் எழுதப்பட்ட தாள்கள், குறுங்கோப்புகள், குறும்படங்கள், ஃபேக்ஸ் (Fax), வரைபடங்கள் இன்ன பிற.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகளை எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும்? 

தகவல்களை அரசு அதிகாரிகளிடம் இருந்து பெறுவதற்கு RTI act சட்டம் மிகவும் பயன் உள்ளது. நானும் RTI மனு மூலம் சில பயன்களை பெற்றதால் சிறு குறிப்பு


கேள்வியை யாருக்கு அனுப்ப வேண்டும்?.


உதாரணமாக நீங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல்கள் பெற வேண்டும் என்று நினைத்தால்


உதாரணம்


பொது தகவல் அதிகாரி,


வட்டாட்சியர் அலுவலகம் ,


கோவில்பட்டி வட்டம். (வட்டத்தின் பெயர்)


தூத்துக்குடி மாவட்டம் 628501 (மாவட்டத்தின் பெயர்) (அஞ்சலக.குறியீடு)


எந்த துறை அரசு அலுவலகத்தில் வேண்டும் என்றாலும் நீங்கள் தகவல்கள் பெறலாம். அந்த அலுவலக விலாசம் இருந்தால் போதும். கூடுதலாக ஒரு வரி பொது தகவல் அதிகாரி.


முகவரி தெரியாது என்ன செய்வது?


உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பலாம்.


பொது தகவல் அதிகாரி ,


மாவட்ட ஆடசியர் அலுவலக முகவரி.


மாநில அளவிலான தகவல்கள் பெறுவதற்கு


பொது தகவல் ஆணையர், தமிழக தகவல் ஆணையம், 2,தியாகராஜர் சாலை,தேனாம்பேட்டை சென்னை-18


Court fees Stamp 10ரூபாய் கு வாங்கி வைத்து , மனுவின் வலது பக்கம் ஓட்ட வேண்டும்.


மனு எப்படி எழுத வேண்டும்?


அனுப்புநர்


பெறுநர்


ஐயா/அம்மா ,


பொருள்;- தகவல் பெறும் உரிமை சட்டம்.2005 ன் படி கீழ்கண்ட பொது தகவல்கள் பெறுவது சம்பந்தம் ஆக


மேற்குறிப்பிட்ட சட்டத்தின் படி நான் கீழ்கண்ட தகவல்களை பெற விரும்புகிறேன். இந்த தகவல்கள் தங்கள் துறை சம்பந்தமாக இல்லை என்றால் ,சம்பந்தப்பட்ட துறைக்கு இந்த மனுவை பரிந்துரை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தகவல்களை பெறுவதற்கு தேவையான விண்ணப்ப கட்டணம் ரூபா 10 காண நீதிமன்ற கட்டண அஞ்சல் தலையை ஒட்டி உள்ளேன். தகவல்கள் பெறுவதற்கு ஏதேனும் கூடுதல் கட்டணம் தேவைப்படின், எழுத்து வடிவமாக எனக்கு தெரியப்படுத்தும் பட்சத்தில் அதையும் செலுத்துவேன் என உறுதி அளிக்கின்றேன்.


/* பெற விரும்பும் தகவல்களுக்கான கேள்விகள்.*/


மேலே கேட்டுள்ள தகவலை நான் இந்திய நாட்டின் குடிமகன் என்ற உரிமையின் அடிப்படையில் கேட்கிறேன்.மேலும்.பெற்ற தகவல்களை வைத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எந்த ஒரு குந்தகமும் அளிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.


( இடது புறம் தேதியும் ஊரும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். வலதுபுறம் உங்கள் கையெழுத்து கண்டிப்பாக இருக்க வேண்டும்)


கேள்விகளை எவ்வாறு கேட்பது?


மனுவை நிராகரிக்கும் உரிமை அதிகாரிக்கு உள்ளது.


ஒருவரின் மீதான நேரடி கேள்விகளை தவிர்க்க வேண்டும்.example நீங்கள் என்ன செய்தீர்கள்?. நீங்கள் எப்போது தருவீர்கள்?


ஒரு குறிப்பிட்ட கேள்வியை கேட்க்கும் முன் சில பொது தகவல் கேட்க வேண்டும்.


உங்களுக்கே தகவல் வேண்டும் என்றாலும் எனக்கு என்ற வார்த்தை இருக்க கூடாது. Example எனக்கு ஏன் தரவில்லை?.


குடும்ப அட்டை தகவல் பெற சிறிய உதாரணம்.


கிராமத்தில் எத்தனை குடும்ப அட்டைகள் உள்ளன? 

குடும்ப அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் யாவை? 

கிராமத்தில் வசித்து வரும் முத்துசாமி என்பவரின் மனுவை நிராகரிக்க காரணங்கள் யாவை? 

முடிந்த வரை ஏன் , எதற்காக , நீங்கள் செய்வீர்களா போன்ற நேரடி கேள்வி வாக்கியங்கள் தவிர்த்து , பத்தியாக கேட்டு அவர்களின் எழுத்து தகவல் பெறப்பட வேண்டும். இல்லை என்றால் வினா தெளிவு இல்லை. வினா போல உள்ளது. விடையளிக்க முடியாது போன்ற பதில்கள் கிடைக்கும்.


எப்போதுமே நீங்கள் பதிவு தபாலில் அனுப்புவது நல்லது.


30 நாட்களில் அவர்கள் உங்களுக்கு தகவல்கள் தர வேண்டும். தகவல் திருப்தி இல்லையெனில் மேல் முறையீடு செய்யலாம்.


நீங்கள் சரியான நபருக்கு அனுப்ப வில்லை எனினும் ,அந்த அதிகாரி சம்பந்தப்பட்ட துறைக்கு கேள்வியை சேர்த்து விடுவார்.


சிறு குறிப்பு:- சில எதிர்ப்பு நடவடிக்கைகள் மறைமுகமாக உங்களுக்கு எதிராக நடக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால் உங்களுக்கான உரிமைகள் கிடைக்கும் வரை போராடலாம்.


உங்களுக்கு தகவல் கிடைக்க வாழ்த்துக்கள்.

பிரகாஷ் 

வாட்ஸாப் - 7871051351