சட்ட அறிவிப்பு கடிதம்.

நான் வாழ, நானே வாதாடுவேன். நியாந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம்.

தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத் (ஏ) துறை கடித எண் 2342/ஏ2/2021-1 நாள் 03-02-2021ன் படி மின்னஞ்சல் மற்றும் பதிவு தபால் மூலம் சார்பு செய்யப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் 1860ன் பிரிவு 499ன் கீழான விதிவிலக்குகள் மற்றும்

நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971ன் கீழான விதிவிலக்குகளுக்குள் உட்பட்டது.

வரி செலுத்தியவன் வறுமையில் வாட, அவ்வரியில் கூலிபெறும் ஊழியர்கள் வசதியாய் வாழ்வது மக்களாட்சி அல்ல; வெள்ளையரை மிஞ்சிய கொள்ளையாட்சியே!. 


அனுப்புதல்: 

பெயர்,

த/பெ 

( இந்திய சாசனம் 1950 கோட்டுபாடு 5ன் படி இந்தியக் குடிமகன் மற்றும் ARTICLE 19(1)(A) இன் படி மற்றும் CPC order 3 rule 2-இன் படி மற்றும் CPC Order 1- Rue 11 இன் படி என் வழக்கில் நானே வாதாடுவேன் )

த/பெ  

விலாசம் 

மொபைல் எண் 


பெறுதல்:

1. வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி,ஊ),

சிங்கம்புணரி  ஊராட்சி ஒன்றியம்

சிவகங்கை மாவட்டம்.

2. திரு. தெ.பாஸ்கரபாண்டியன், இ.ஆ.ப.,

மாவட்ட ஆட்சித் தலைவா்,

சிவகங்கை மாவட்டம். 


பார்வை:

1. வறுமைக்கோட்டிறிக்கு கீழ் உள்ளவர் சான்றிதழ் வழங்க கோரி மனு பதிவு தபாலில் அனுப்பிய நாள்: 14-07-1022.

2. என்னுடைய மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்திய சாட்சியம் சட்டம் மூலம் சான்று நகல் கோரிய கடிதம் அனுப்பிய நாள்: 18-08-2022.

3. இந்திய சாட்சியம் சட்டத்தின் கீழ் நீனைவுட்டல் கடிதம் அனுப்பிய நாள்: 09-09-2022.


பொருள்:

இந்திய சாசனமாம், இந்திய அரசமைப்பு 1950 கோட்டுபாடு 21 & நீதிமன்ற சாசனமாம், இந்திய சாட்சிய சட்டம் 1872 உறுபு 101ன் கீழ் சட்ட  அறிவிப்பு கடிதம்.

இந்திய சாசனக் கோட்பாடுகள் 19(1)(அ) மற்றும் 21ன் கீழ் தகவல் பெறுவது அடிப்படை உரிமையாகும் மற்றும் இந்திய சாசனக் கோட்பாடு 51அ-ன் படி, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவது அனைவரின் சட்டப்படியான  கடமையாகும்.

ஆனாலிது பொதுமக்களுக்கு ஊதியமில்லா கடமையாகவும், உங்களை போன்ற ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய கடமையாகவும் இருப்பதால், மக்களை விட, (எங், மக்)களின் வரிப்பணத்தில் கூலிபெறும் உங்களை போன்ற ஊழியர்களுக்கே, அதிகப் பொறுப்பு இருக்கிறது. 

பார்வையில் கண்டுள்ள படி எனக்கு இதுநாள் வரையில் நான் கோரிய சான்றிதழ் மற்றும் சான்று நகல்கள் எனக்கு சார்பு செய்யப்படவில்லை. மேற்கொண்டு இவ்வறிவிப்பின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து நான் கோரிய BPL சான்றிதழ் மற்றும் சான்று நகல்கள் 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டுகிறேன். தவறும் பட்சத்தில் தன் கடமையை சரிவர செய்யாத காரணத்தினால் தங்களின் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தையும் எழுத்து மூலமாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு அரசு அலுவலராக இருந்து கொண்டு தாங்கள் இவ்வாறு சட்டத்தை மதிக்காமல் செயல்படுவது என்பது இந்திய அரசியலமைப்பு கோட்பாட்டுக்கு எதிராக உள்ளது. இதற்காகவே நான் தங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், 1860 பிரிவு 166A-ன் படி மற்றும் இந்திய தண்டனைச் சட்டம், 1860 பிரிவு 166A-ன் படியும், ஒருவேளை பொய்யான தகவல்கள் & ஆவணங்கள் தரப்பட்டால் பிரிவு 167-ன் படியும், தங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாள்:28.10.2022 

இடம்: சிவகங்கை மாவட்டம்

அஞ்சல். 

கையெழுத்து.


இந்த மின்னஞ்சலுக்கு(EMAIL / GMAIL) பதில் இல்லை என்றால் இதையே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ஆவணமாக பயன்படுத்தி கொள்ளப்படும் என்பதை தொரிவித்துக் கொள்கிறேன்.

உரிய சட்ட நடவடிக்கைக்காக நகல் சமர்ப்பிக்கப்படுகிறது.

1. பணியாளர் மற்று்ம் நிருவாகச் சீர்த்திருத்தத் (ஏ) துறை 

மின்னஞ்சல் முகவரி: Parsec@tn.gov.in

2. உயர்நீதிமன்ற பொதுப்பதிவாளரின் மின்னஞ்சல் முகவரி: regrgenl@tn.nic.in


பிரகாஷ் பேனா புரட்சி RTI


மேலும் அறிய இணைந்திடுங்கள் ( LINK BELOW)

டெலிக்ராம்       -     https://t.me/+SXMfwEhx2FdmODRl 

வாட்ஸாப்ப்     -    https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK 

பேஸ்புக்            -   https://www.facebook.com/profile.php?id=100084805683410