30 நாட்களுக்குள் சர்வே செய்து நிலத்தை சர்வேயர் அளந்து காட்ட வேண்டும்

அரசு உத்திரவு



நிலஅளவை அல்லது மறுநிலஅளவை செய்வதற்கான கட்டணம் செலுத்தியவுடன், அதனை பெற்றுக் கொண்டதிலிருந்து 30 நாட்களுக்குள், நிலஅளவை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பங்கள் உரிய காலத்திற்குள் தீர்வு செய்யப்பட்டமை குறித்தும், நிர்ணயிக்கப்பட்ட செய்மானம் ஒவ்வொரு மாதமும் ஈட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும், நெருக்கமாக கண்காணிக்கும் பொருட்டு, மேல்நிலை அலுவலர்கள், மேலோட்ட கள் ஆய்வினையும், விரிவான பணிமுன்னேற்ற ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். வேண்டுமென்றே தாமதம் செய்தல், பணியில் அக்கறையின்மை மற்றும் நேர்மையின்மை, நிலஅளவர்களிடமோ அல்லது தொடர்புடைய மற்ற அலுவலர்களிடமோ காணப்படின் அவர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை, தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டுகள் நிருபணமானால் தகுந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். பணியில் சுணக்கங்கள் தொடர்ந்து காணப்படின், தொடர்புடைய அலுவலர்கள் / நிலஅளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன் அவர்களை முக்கியத்துவமற்ற பணியிடத்திற்கு மாறுதல் செய்தல் வேண்டும்

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் ஆணைப்படி, சென்னை-5, நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரால் ந.க.ண5/20403/2020 (நி.அ) நாள்: 15.03.2021ன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து நிலஅளவை பதிவேடுகள் துறை, மண்டல துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள நிலஅளவை செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிக்காட்டுதல்கள்

( சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை வழக்கு எண்.W.P.(MD)No.13465/2020 W.M.P.(MD)No. மற்றும் 11228/2020 ல் நீதிமன்ற உத்தரவு நாள்: 05.10.2020)


பிரகாஷ் பேனா புரட்சி RTI


மேலும் அறிய இணைந்திடுங்கள் ( LINK BELOW)

டெலிக்ராம்       -     https://t.me/+SXMfwEhx2FdmODRl 

வாட்ஸாப்ப்     -    https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK 

பேஸ்புக்            -   https://www.facebook.com/profile.php?id=100084805683410