தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரும் மனுக்களின் மாதிரி
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(1) & 6(3) -ன் கீழ் மனு.
ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சல்
அனுப்புநர்:
________________________________
________________________________
________________________________
________________________________
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
##########
அன்புடையீர்
வணக்கம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பின்வரும் தகவல்களை வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.
பொருள்: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்தில் தங்கள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வனப்பகுதி கண்மாய் விவரங்கள் சம்பந்தமாக
தகவல் வேண்டி மனு.
1. சிவகங்கை மாவட்டம்,சிங்கம்புணரி வட்டத்தில் தங்கள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் எத்தனை வன கண்மாய்கள் இருந்து வருகின்றது
என்ற தகவல் தருக
2. சிவகங்கை மாவட்டம்,சிங்கம்புணரி வட்டத்தில் தங்கள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வன கண்மாயின் பெயர் விபரம் தகவல் தருக .
3. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்தில் தங்கள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒவ்வொரு வன கண்மாயின் சர்வே எண் & ஒவ்வொரு வன கண்மாயின் மொத்த விஸ்தீரணம் எவ்வளவு என்ற தகவல் தருக.
4. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்தில் தங்கள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒவ்வொரு வன கண்மாயின் புலப்பட வரைபட நகல் தருக.
5. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்தில் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒவ்வொரு வன கண்மாயின் வீஸ்தீரணத்தில் யூனியன் பகுதிக்கு கட்டுப்பட்ட விஸ்தீரணம் எவ்வளவு என்ற தகவல் தருக
6. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்தில் தங்கள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒவ்வொரு வன கண்மாயின் வீஸ்தீரணத்தில் யூனியன் பகுதிக்கு கட்டுப்பட்ட விஸ்தீரணம் புலப்பட வரைபடம் நகல் தருக
தகவல் மனு கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண ஓட்டு வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன். எனவே ஷை தகவல்களை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.
இடம்:
நாள்: 17.08.2022 தங்கள் உண்மையுள்ள
இணைப்பு :-
1.__________________________________
2.__________________________________
----------------------*****--------------------------******--------------------****--------------------------
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 19(1) -ன் கீழ் முதல் மேல்முறையீடுமனு.
ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சல்
நேர்மைமிகு அய்யா,
பொருள் : மேல்முறையீடு - தகவல் பெரும் உரிமை சட்டம் 2005, பிரிவு 19(1)-ன் கீழ் முதல் மேல்முறையீடு & பிரிவு 7(6)-ன் கீழ் சான்றுகள் இலவசமாக தகவல் வழங்க கோருதல்.
பார்வை : தகவல் பெரும் உரிமை சட்டம் 2005, பிரிவு 19(1)-ன் கீழ் பொது தகவல் அலுவலர் மற்றும் மாவட்ட வனக்காப்பு அதிகாரி, மாவட்ட வனக்காப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் சிவகங்கை தகவல் கோரிய எனது விண்ணப்பம் நாள் 17-08-2022
அய்யா, வணக்கம்.
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் சில தகவல்கள் கோரி கடந்த 17-08-2022 தேதியன்று பொது தகவல் அலுவலர் மற்றும் மாவட்ட வனக்காப்பு அதிகாரி, மாவட்ட வனக்காப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் சிவகங்கை முகவரியிலுள்ள பொது தகவல் அலுவலரிடம் விண்ணப்பித்து இருந்தேன்.எனது அசல் மனுவானது 6(3)-ன் கீழ் வனச்சரக அலுவலர், சமூக வனச்சரகம், திருப்பத்தூருக்கு ந.க.எண்: 5517/2022/கு, நாள்: 05.09.2002 அன்று மாறுதல் செய்யப்பட்டதை அறிந்தேன்.
இன்று வரை பொது தகவல் அலுவலர் எந்த பதிலும் வழங்கவில்லை என்பது வேதனையளிக்கிறது. கடந்த 18-09-2022 -ந் தேதியுடன் 30 நாட்கள் கடந்த நிலையில், இந்த மேல்முறையீடு தங்களுக்கு செய்யப்படுகிறது
மனுதாரர் முதல் மேல்முறையீடு கோரும் பரிகாரம் என்னவென்றால் வரையறுக்கப்பட்ட கால கெடுவிற்குள் எனது மனுவிற்குரிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள் தங்கள் துறையின் பொது தகவல் அலுவலர் அவர்கள் வழங்க மறுத்து முதல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் சட்டப்பிரிவு 7(6) ன் கீழ் சான்றுகள் இலவசமாய் கட்டணமின்றி வழங்க கோரியும், மாண்பமை சமூகம் தக்கதென கருதும் இனைபிற . நடவடிக்கைகள் எடுக்ககோரியும் வேண்டுகிறேன். தவறும் பட்சத்தில் சட்டப்பிரிவு 19(3)-ன் கீழ் கீழ் இரண்டாவது மேல் முறையீடு செய்து நிவாரணம் பெறவேண்டிய கட்டாயத்திற்கு மனுதாரர் ஆகிய நான் தள்ளப்படுவதாக உணர்கிறேன்.
இணைப்பு :
1. த.அ.உ சட்டம் 2005 பிரிவு 6 (1), 6(3) & 7(1)- ன் கீழ் 17-08-2022 அன்று நான் அனுப்பிய மனு நகல்
2. 6(3)(2) ன் கீழ் ந.க.எண்: 5517/2022/கு, நாள்: 05.09.2002 அன்று மாறுதல் செய்யப்பட்ட கடித நகல்
3. 18-08-2022 அன்று ஒப்புகை சீட்டின் நகல்
நாள் : ____.10.2022
இடம்
: சிங்கம்புணரி மனுதாரர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 19(3)ன் கீழ் இரண்டாவது மேல்முறையீடு
ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சல்

பிரகாஷ்
பேனா புரட்சி RTI
மேலும் அறிய இணைந்திடுங்கள் ( LINK BELOW)
டெலிக்ராம் - https://t.me/+SXMfwEhx2FdmODRl
வாட்ஸாப்ப் - https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK
பேஸ்புக் - https://www.facebook.com/profile.php?id=100084805683410
0 Comments