Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆண்கள் (கணவன்) கொடுமை !!!! எங்கே புகாரளிப்பது ???

தேசிய & மாநில மகளிர் நல ஆணையம் பற்றிய முழுமையான விவரங்கள் !!!




மகளிர் ஆணையம்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இவ்வாணையத்தில் மாநில மகளிர் ஆணையத் தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மகளிர் ஆணையம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்களுக்கு சமத்துவம் வழங்கவும்,



பெண்களுக்கெதிரான அனைத்து வகை இன்னல்களிருந்து பாதுகாப்பினை உறுதி செய்யவும் மற்றும் குடும்பத்திலும், சமுதாயத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். மேலும் மகளிர் ஆணையம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. இவ்வாணையம் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


ஆணையத்தின் குறிக்கோள்கள்

  • மகளிரின் நலனை உறுதி செய்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.
  • பாலினப்பாகுபாடு குறித்த விவகாரங்களை கவனித்தல்.
  • பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆணையத்தின் பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைத்தல்.
  • மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள்
  • இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்ட பிரிவுகள் பாதுகாப்புகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்தான விபரங்களை கவனித்தல்.
  • பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முறையாக செயல்படுத்தப்படாத போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்
  • பெண்களுக்கு நீதி கிடைக்க தவறும் பட்சத்தில் தேவையான நீதியைப் பெறுவதற்கு உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளஅரசுக்கு பரிந்துரை செய்தல்.
  • பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உரிய அதிகாரம் பெற்ற அலுவலர்கள் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதுகாப்பிற்கான உத்திரவாதம் வழங்கப்படாத நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகளிர் ஆணையத்தை நேரிடையாக அணுகலாம்.

தேசிய மகளிர் ஆணையம்

 1992-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி அமைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பெண்களின் நலனை பாதுகாப்பதற்காக 1990-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய மகளிர் ஆணைய சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ அமைப்பாக இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.


பெண்களின் நலன் மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களிலும் இந்த ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது. அரசியல் சாசனப் படியும், சட்டப்படியும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்கள் குறித்து ஆய்வு செய்தல், கண்காணித்தல் போன்றவற்றில் தேசிய மகளிர் ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது.


பெண்களின் நலன் தொடர்பாக தற்போது உள்ள சட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யும் இந்த ஆணையம், அந்த சட்டங்களில் எங்கெல்லாம் குறைகளும், பலவீனங்களும் இருக்கின்றனவோ அவற்றையும் ஆய்வுசெய்து தேவையான திருத்தங்களை செய்ய பரிந்துரைக்கிறது. இவை தவிர எத்தகைய புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளையும் தேசிய மகளிர் ஆணையம் வழங்குகிறது.


பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது சம்பந்தப்பட்ட புகார்களை பெற்று அவற்றின் அடிப்படையிலும், குற்றச் செயல்களை அறிந்து தாமாகவும் நோட்டீஸ் அனுப்பி இந்த ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது. உரிமைகள் பறிக்கப்படும்போது அவர்களுக்கு தேவையான உதவி, ஆதரவு, சட்ட கவனிப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பதற்காகவே தேசிய மகளிர் ஆணையம் இவ்வாறு செய்கிறது.


வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்கள் சமத்துவம் பெறுவதற்கு வசதியாகவும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதையும் இந்த ஆணையம் கண்காணிக்கிறது. பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசன மற்றும் சட்ட பாதுகாப்புகளை ஆய்வு செய்வது, சட்ட தீர்வுகளை பரிந்துரைப்பது, குறைகளை தீர்க்க உதவி செய்வது, பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து கொள்கை விஷயங்களிலும் அரசுக்கு அறிவுரை வழங்குவது உள்ளிட்டவைதான் தேசிய மகளிர் ஆணையத்தின் முதன்மைப் பணிகள் ஆகும்.


தமிழ்நாடு மகளிர் ஆணையம் முகவரி

உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், கலச மஹால், சேப்பாக்கம், சென்னை - 600005


தேசிய மகளிர் ஆணையம் முகவரி

Plot No. 21, FC 33, Jasola Institutional Area,

New Delhi – 110 025


மகளிர் ஆணைய இணைய தளம்

http://ncw.nic.in/

ஆன்லைன் புகார் செய்ய 

http://ncwapps.nic.in/onlinecomplaintsv2/


பின்குறிப்பு

மகளிர் ஆணையம் ஒரு நீதிமன்றம் போன்ற அதிகாரமிக்க அமைப்புதான் ஆனால் முழுக்க முழுக்க அரசியல்வாதிகள் பொறுப்பில் இருப்பதால் பெரிய அளவில் மகளிர் ஆணையத்தில் நியாயத்தை எதிர்பார்க்க இயலாது. மகளிர் திட்ட அலுவலகம் சமூக நலத்துறை போன்ற மகளிர் நலன் சார்ந்த அரசு அலுவலகம் போன்றே மகளிர் ஆணையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் எதிர்காலத்தில் மகளிர் ஆணையம் நிச்சயமாக அதிகாரமிக்க அமைப்பாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை சமூக அக்கறை மிக்கவர்கள் குரல் கொடுப்போம் மகளிர் ஆணையம் மகளிர் உரிமைகளுக்காக அதிகாரத்தை பெறுவதற்கு தொடர்ந்து போராடுவோம்...


பிரகாஷ் பேனா புரட்சி RTI


மேலும் அறிய இணைந்திடுங்கள் ( LINK BELOW)

டெலிக்ராம்       -     https://t.me/+SXMfwEhx2FdmODRl 

வாட்ஸாப்ப்     -    https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK 

பேஸ்புக்            -   https://www.facebook.com/profile.php?id=100084805683410

 

Post a Comment

0 Comments