போஸ்டர் ஒட்டாதே !!!
தமிழ்நாடு திறந்த வெளிகள் அழகுச் சீர்குலைப்புத்தடுப்பு சட்டம். Tamil Nadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959.
சுருக்கமாக சொல்லணும்னா சுவர்களில் போஸ்டர் ஓட்ட கூடாது பொது இடங்களில் அழகை கெடுக்கக்கூடாது அவ்வளவுதாங்க...
தமிழ்நாடு திறந்த வெளிகள் அழகுச் சீர்குலைப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரிவு-4 ன்படி பொதுமக்கள் பார்வையில் படக்கூடிய இடத்தில் அந்த இடம் அமைந்துள்ள சொத்தின் உரிமையாளர் அல்லது அதன் அனுபவிப்பவர் அல்லது மேலாண்மை பொறுப்பில் உள்ள நபரின் எழுத்து வடிவிலான அனுமதி இல்லாமல் விளம்பரத்தை ஒட்டி வைத்தாலோ, பொறித்து வைத்தாலோ அல்லது காட்சிக்கு வைக்கும் ஏவரொருவருக்கும் மூன்று மாதங்கள் வரையில் சிறைத் தண்டனையோ அல்லது ரூ.200/- வரை அல்லது இரண்டுமோ விதித்துத் தமிழ்நாடு திறந்தவெளிகள் (ஆழகுச் சீர்குலைப்பு தடுப்பு ) சட்டத்தின் படி தண்டிக்கப்படுவார்.
நீதிமன்றத்தில் பிரிவு-4 யின் கீழ் குற்றவாளியை குற்றவாளி எனத்தீர்மானித்துத் தீர்ப்பு வழங்குகையில் ஆணையின் மூலம், அந்த கட்டிடத்தின் அல்லது இடத்தின் உரிமையாளர்களுக்கு அல்லது அனுபவ உரிமையாளர் அல்லது நிர்வாகிக்கு, குற்றவாளியின் செயலால் அழகு குலைக்கப்பட்ட அந்த கட்டத்தின் பகுதிகளில் அல்லது இடத்தின் பகுதிகளில் செய்யப்பட்டிருந்த விளம்பரத்தை அழிக்கவும், வண்ணம் தீட்டவும் மேற் சொன்னவருக்கு நியாயமாக எவ்வளவு செலவு ஏற்படக்கூடுமோ அதற்கு மொத்தத்தில் ரூபாய் 500 இழப்பீட்டுத் தொகையாகக் கொடுக்குமாறு குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் கட்டளையிடலாம்.
மேலும் அறிய இணைத்திடுங்கள் ( LINK BELOW)
டெலிக்ராம் - https://t.me/+SXMfwEhx2FdmODRl
வாட்ஸாப்ப் - https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK
பேஸ்புக் - https://www.facebook.com/profile.php?id=100084805683410

0 Comments