வாரிசுச் சான்று
புதிய வழிகாட்டு நடைமுறையும் கவனிக்க வேண்டிய அம்சங்களும்!
குடும்ப உறுப்பினர் ஒருவர் காலமாகிவிட்டால், அவருடைய சொத்து மற்றும் பல வகையில் சேர்த்து வைத்த பணத்துக்கு வாரிசு தாரர் தன் வாரிசு உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற் கான முதன்மையான ஆவணம்தான் ‘வாரிசுச் சான்று’. இந்த வாரிசுச் சான்று வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது, தமிழக அரசு. இதை எப்படிப் பெறுவது?
புதிய நடைமுறை என்ன?
வாரிசுச் சான்று வேண்டும் என்று ‘ஆன்லைன்’ மூலம் ஒருவர் வட்டாட்சியருக்கு சமர்ப்பிக்கும் விண்ணப்ப மானது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலமாகத்தான் வருவாய் வட்டாட்சியரை சென்றடைகிறது. வட்டாட்சி யர் வாரிசுச் சான்று வழங்கு கிறார்.
கிராம நிர்வாக அலுவலர் தன்னிடம் வரப்பெற்ற வாரிசுச் சான்று விண்ணப் பத்தை ஆவண அடிப்படை யில் பரிசீலனை செய்தும், விசாரணை செய்தும், அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளவோ, தேவைப்படும் திருத்தம் செய்யவோ, உரிய காரணத்துடன் தன்னுடைய பரிந்துரையை வருவாய் ஆய்வாளருக்கு ஒரு வார காலத்துக்குள் அனுப்பி வைக் கிறார். வருவாய் ஆய்வாளரும் ஒரு வாரத்துக்குள் விசாரணை செய்து வட்டாட்சியருக்கு அனுப்புகிறார். வருவாய் ஆய் வாளரின் அறிக்கை கிடைக்கப் பெற்ற ஒரு வார காலத்துக்குள் வட்டாட்சியர் வாரிசுச் சான்று வழங்குகிறார்.விண்ணப்பதாரர் தனக்குக் குறுஞ்செய்தி வரப்பெற்றதும் வலைதளத்தில் வாரிசுச் சான்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பது புதிதாக வந்துள்ள நடைமுறை.
கடைசியாக வாழ்ந்த இடம்...
இறந்துபோனவர் எந்த வருவாய் வட்டத்தில் (Taluk) கடைசியாக வசித்து வந்தாரோ, அந்த வட்டத்தின் வட்டாட்சியருக்கு ‘ஆன் லைன்’ மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இறந்துபோனவர், கடைசியாக வசித்த வருவாய் வட்டத்தில் ஆறு மாதத்துக்குக் குறைவாகவே வசித்திருப்பார் எனில், அவர் எந்த வருவாய் வட்டத்தில் ஓராண்டுக்கு மேல் வசித்து வந்தாரோ, அந்த வட்டத்தின் வட்டாட்சி யரிடமிருந்து அறிக்கை பெறப்படும்.
வாரிசுதாரர்கள்...
இறந்துபோனவர் மண மானவர் எனில், பின்வருபவர் களில் யாரெல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ, அவர்கள் மட்டுமே வாரிசுகளாகக் குறிப்பிடப்படுவார்கள்.
1. இறந்தவரின் தந்தை, 2. இறந்தவரின் தாய், 3. இறந்த வரின் மனைவி, 4. இறந்தவரின் மகன்(கள்), 5. இறந்தவரின் மகள்(கள்). இறந்துபோனவர் மணமாகாதவர் எனில், அவரின் தந்தை, தாய், சகோதரர்(கள்), சகோதரிகளில் யாரெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களோ, அவர்கள் மட்டுமே வாரிசுகளாகக் குறிப்பிடப்படுவர். வழங்கப்படும் வாரிசுச் சான்றானது அனைவருக்கும் பொதுவான ஓர் ஆவணமாக இருக்கும். ஜாதி, மதம், பாலினம் அடிப்படையில் வேறுபாடு இருக்காது.
விண்ணப்பிக்கும் தகுதி...
யாரெல்லாம் வாரிசாக அறிவிக்கப்படத் தகுதி உள்ளவர்களோ, அவர்களுள் யாராவது ஒருவர் வாரிசுச் சான்று கோரி விண்ணப்பிக்கலாம். இறந்து போனவரின் மரணச்சான்று அல்லது மரணம் தாமதமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால், வருவாய் கோட்டாட்சியரின் சான்று வேண்டும். காணாமல் போனவர் எனில், காணாமல் போய் ஏழு வருடங்கள் கடந்தபின், காணாமல்போனவர் இறந்துவிட்டார் என்பதற்கான நீதிமன்ற ஆணையுடன், இறந்தவரின் முகவரிக்கு ஆதாரமாக, ஆதார், வாக்களர் அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், டிரைவிங் லைசென்ஸ், ஓய்வூதிய ஆணை அல்லது இவற்றுக்கு இணையான ஏதோ ஓர் ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.
வாரிசு ஆதாரம்...
இறந்துபோனவருடனான உறவை நிரூபிக்க, திருமணப் பதிவுச் சான்று, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ஜாதிச் சான்று, பிறப்புச்சான்று, பள்ளி மாற்றுச் சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். மைனர் வாரிசுகள் தன் காப்பாளர் மூலம் விண்ணப்பிக்கலாம். தத்தெடுத்த குழந்தை களுக்கு சட்ட பூர்வமான தத்தெடுப்பு என்பதற்கு ஆதாரம் அவசியம் வேண்டும்.
மேல் முறையீடு...
வட்டாட்சியரின் ஆணை தவறாக இருப்பின், வருவாய் கோட்டாட்சியருக்கும், அந்த ஆணையைத் திருத்தி அமைக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கும் ஓராண்டுக்குள் மேல்முறையீடு செய்யலாம். தவறான தகவல் மூலம் பெற்ற வாரிசுச் சான்று, அதை வழங்கிய அலுவலராலேயே ரத்து செய்யப்படும்.
நிபந்தனை கூடாது...
இந்த வாரிசுச் சான்றானது ஓய்வுக்கால பணப் பலன் பெற மட்டும் என்பது போன்ற நிபந்தனை களோ, இந்தச் சான்று ஆறு மாதம் மட்டுமே செல்லுபடியாகும் என்றோ, உரிமையியல் நீதி மன்றங்களில் செல்லத்தக்கதல்ல என்பது போன்ற நிபந்தனைகள் இந்த வாரிசுச் சான்றில் இடம் பெறக் கூடாது.
வாரிசுகள் கவனத்துக்கு...
வாரிசுச் சான்றிதழில் தன் பெயர் இடம் பெற்றுவிட்டது என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்து, இறந்துபோனவரின் சொத்து, நிதியம் (Corpus) போன்றவற்றில் ஒருவர் தன்னுடைய பாத்தியதையைக் (Right) கோர முடியாது என்பதுதான் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான செய்தி. சமீபகாலத்தில் இதுபற்றிய புரிந்துகொள்ளல் இல்லாமலேயே குடும்பச் சச்சரவுகள் பெருகி வருகின்றன. அதிலும் குறிப்பாக, இறந்துபோனவர் அரசுப் பணி செய்தவர் எனில், இத்தகு சச்சரவுகள் அதிகம்.
அரசுப் பணியினரின் குடும்பம் என்பது...
I. மனைவி, கணவர் (சட்டப் பூர்வமாகப் பிரித்து வைக்கப் பட்டுள்ள கணவர் / மனைவி உட்பட) மாற்றாந்தாய், மாற்றுத் தந்தை மகன், தத்தெடுத்த மகன் உட்பட அனைத்து மகன்கள், மணமாகாத மாற்றுத்தாய் மகள் / தந்தை, மகள், தத்தெடுத்த மகள் உள்ளிட்ட அனைத்து மகள்கள் ஆகியோர் குடும்ப உறுப்பினர் களுள் முதல் பகுதியினர்.
II. விதவை மகள் / மகள்கள், மணமாகாத சகோதரி, விதவை சகோதரி, மணமான மகள்கள், இறந்துபோனவரின் (இறந்து போன மகன் வழி) பேரக் குழந்தைகள் அனைவரும் குடும்ப உறுப்பினரே என்றாலும் இவர் கள் இரண்டாம் பகுதியினர்.
அரசு ஊழியர் உயிருடன் உள்ளபோதே தனக்குக் கிடைக்க வேண்டிய பணிக்கொடை முதலானவற்றை மேற்கண்ட பகுதி I, பகுதி II வாரிசுகளில் யாருக்கு வேண்டுமானாலும் வாரிசு நியமனம் செய்து வைக்கலாம். வாரிசு நியமனம் செய் யாமல் இறந்துவிட்டாலோ, செய்த நியமனம் பெற வேண்டிய முழுத்தொகைக்கும் (100%) முழு விகிதாசாரத்தில் இல்லை என்றா லும், முதல் பகுதியில் கண்ட குடும்ப உறுப்பினர்களுக்குத்தான் சமமாகக் கிடைக்குமே தவிர, இரண்டாம் பகுதியினருக்கு கிடைக்காது. முதல்பகுதி வாரிசுகள் இல்லாத பட்சத்தில் இரண்டாம் பகுதியினருக்கு சமமாகப் பங்கிடப்படும்.
குடும்ப பென்ஷன் என்பது கணவர் இறந்தால் மனைவிக்கும், மனைவி இறந்தால் கணவருக்கும் மட்டுமே உரியது. கணவர், மனைவி இறந்திருந்தால், முதல் பகுதியில் உள்ள பிள்ளைகளுக்கு மட்டும் கிடைக்கும். மணமாகாத ஊழியர் எனில் தந்தை, தாய் குடும்ப பென்ஷன் பெறுவார்கள்!
மேலும் அறிய இணைத்திடுங்கள் ( LINK BELOW)
டெலிக்ராம் - https://t.me/+SXMfwEhx2FdmODRl
வாட்ஸாப்ப் - https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK
பேஸ்புக் - https://www.facebook.com/profile.php?id=100084805683410

0 Comments