ஒப்பந்த தொழிலாளர் நிரந்தரப்படுத்த கோரி சட்டப்படி மனு !!!!!
தொழிலாளர்களை நிரந்தர படுத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டப்படி இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றி இருந்தால் அவரை நிரந்தரப்படுத்த வேண்டும் என சட்டமும் கூறுகிறது இதற்காக பல்வேறு உயர் நீதிமன்ற தீர்ப்புகளும் இவற்றை உறுதி செய்கிறது. அதன்படி ஒப்பந்த தொழிலாளியாக இருக்கும் ஒருவரை நிரந்தர படுத்துவதற்கு கோரிக்கை விடுக்கும் விண்ணப்பம் மாடல் இது இதுபோல பாதிக்கப்பட்டு இருப்போர் இம்மனுவை பயன்படுத்திக் கொள்ளவும்.
மனுதார்:
...............................................................
த/பெ......................................................
..................................................................
...................................................................
..........................................................வட்டம்,
..................................................மாவட்டம்.
எதிர் மனுதார்:
............................................................
............................................................
............................................................
............................................................
பெறுநர்:
திரு. மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் அவர்கள்,
மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகம்,
.......................................................
.........................................மாவட்டம்.
மதிப்பு மிகுந்த அய்யா / அம்மையீர்,
பொருள் :
தொழிற் தகராறு சட்டம் - 1947 இன் படி புகார் மற்றும் தமிழ்நாடு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தபடுத்தும் சட்டம் - 1981 இன் பிரிவு 2/3
ன்படி 2 ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்பணி செய்து வரும் மனு தாராகிய என்னை பணி நிரந்தபடுத்த உத்தரவிடக் கோரும் விண்ணப்பம் பணிந்தனுப்பபடுகிறது.
1. மனுதாராகிய நான்................................... மாவட்டம்,........................................................................ வட்டம்,................................ கிராமம்,........................................................................., கதவு எண்.................. இல் குடியிருந்து வரும்.................................. மகனான..........................., வயது -............. ஆகிய நான் வழங்கும் அபிடவிட்டு (சத்தியபிரமாணம்) யாதெனில்
2 .மனுதாராகிய நான்................................ மாவட்டம்,........................ வட்டம்,.............................கிராமம், ( .......... பணி விபரம்.......) ஒப்பந்த பணியாளராக கடந்த ....................... தேதி முதல் பணியாற்றி வந்தேன். எனது பணிக் காலங்களில் நான் நிர்வாகத்தினரால் இதுவரை எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளானதில்லை. மனுதாராகிய நான் பணியில் சேர்ந்து........................ ஆண்டு காலம் ஆகியும் மேற்படி அரசு /தனியார் நிறுவனம் என்னை நிரந்தர தொழிலாளியாக அறிவிக்கவில்லை. இது எனது அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது. இதன் காரணங்களால் நானும் எனது குடும்பத்தாரும் அநேக மன உளைச்சலுக்கும் / கஷ்ட நஷ்டத்திற்கும் ஆளாக்கப்பட்டுள்ளோம்
3. மேலும் தமிழ்நாடு தொழில்நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தபடுத்தும்.சட்டம் 1981 இன் பிரிவு 2/3
ன்படி 2 ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்பணி செய்திருந்தால் நிரந்தபடுத்தப்பட வேண்டும். எனக் கூறுகிறது. மேலும் அதற்கு ஆதரவாக சென்னை, உயர் நீதிமன்றம் வழக்கு எண் .W. P.No.5980 of 2004 தீர்ப்புரை நாள் : 03.08.2012 இல் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மெட்ராஸ் ஹைகோர்ட்டு பென்ஞ், மதுரை வழக்கு எண் .W.P.(MD).No. 5653 of 2020, தீர்ப்புரை நாள் : 18.03.2020 இல் இவை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்காணும் தீர்ப்புரைகள் எனது இவ்வழக்கிற்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் - 1950 இன் 14வது பிரிவு படி பொருந்தும் என மனுதாராகிய என்னால் கருதப்படுகிறது.
4. ஆகையால் தயவு செய்து தமிழ்நாடு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தபடுத்தும் சட்டம் 1981 இன் பிரிவு 2/3
ன்படி 480 நாட்களுக்கு மேலாக சுமார்.............................. ஆண்டு காலம் தொடர்பணி செய்து வரும் என்னை நிரந்தபடுத்த உத்தரவிட வேணுமாய் மனுதாராகிய நான் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள
தேதி:
இடம்:
இம்மனு இந்திய சாட்சிய சட்டம் - 1872 இன் 70வது பிரிவுப்படி இதையே பிரமாணமாக ..... .......................... தேதியன்று எனது இல்லத்தில் வைத்து என்னால் கையொப்பமிடப்படுகிறது.
விதைத்துக் கொண்டே இருப்போம்
முளைத்தால் மரம் , இல்லையேல்
மண்ணிற்கு உரம்.
பிரகாஷ் - சமூக ஆர்வலர்
மேலும் அறிய இணைந்திடுங்கள் ( LINK BELOW)
டெலிக்ராம் - https://t.me/+SXMfwEhx2FdmODRl
வாட்ஸாப்ப் - https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK
பேஸ்புக் - https://www.facebook.com/profile.php?id=100084805683410
.jpeg)
0 Comments