தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 19(1)-ன் கீழ் முதல் மேல்முறையீடு மனு -மாதிரி




தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 19(1)-ன் கீழ் முதல் மேல்முறையீடு.

ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சல்

கடித எண் – MPS / RTI026 / 2022                மொத்த பக்கம் : 2

மனுதாரர்

 


பெறுநர்

 

உயர்திரு  முதல் மேல்முறையீட்டு அலுவலர் அவர்கள்

மின் பகிர்மானம்

தமிழ்நாடு மின்சார வாரியம்


 

பொருள் : மேல்முறையீடு - தகவல் பெரும் உரிமை சட்டம் 2005, பிரிவு 19(1)-ன் கீழ் முதல் மேல்முறையீடு & பிரிவு 7(6)-ன் கீழ் சான்றுகள் இலவசமாக தகவல் வழங்க கோருதல்.

 

பார்வை : தகவல் பெரும் உரிமை சட்டம் 2005, பிரிவு 19(1)-ன் கீழ் பொது தகவல் அலுவலர், மின் பகிர்மானம், தமிழ்நாடு மின்சார வாரியம், திருப்பத்தூர் -630211  தகவல் கோரிய எனது விண்ணப்பம் நாள் 21-07-2022

 

அய்யா, வணக்கம்.

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் சில தகவல்கள் கோரி கடந்த 21-07-2022 தேதியன்று மின் பகிர்மானம், தமிழ்நாடு மின்சார வாரியம், திருப்பத்தூர் - 630211 முகவரியிலுள்ள பொது தகவல் அலுவலரிடம் விண்ணப்பித்து இருந்தேன். பொது தகவல் அலுவலர் எந்த பதிலும் வழங்கவில்லை என்பது வேதனையளிக்கிறது. கடந்த 21-08-2022 ந்தேதியுடன் 30 நாட்கள் கடந்த நிலையில், இந்த  மேல்முறையீடு தங்களுக்கு செய்யப்படுகிறது.

மனுதாரர் முதல் மேல்முறையீடு கோரும் பரிகாரம் என்னவென்றால் வரையறுக்கப்பட்ட கால கெடுவிற்குள் எனது மனுவிற்குரிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள் தங்கள் துறையின் பொது தகவல் அலுவலர் அவர்கள் வழங்க மறுத்து முதல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் சட்டப்பிரிவு 7(6) ன் கீழ் சான்றுகள் இலவசமாய் கட்டணமின்றி வழங்க கோரியும்,

மாண்பமை சமூகம் தக்கதென கருதும் இனைபிற . நடவடிக்கைகள் எடுக்ககோரியும் வேண்டுகிறேன்.

தவறும் பட்சத்தில் சட்டப்பிரிவு 19(3)-ன் கீழ் கீழ் இரண்டாவது மேல் முறையீடு செய்து நிவாரணம் பெறவேண்டிய கட்டாயத்திற்கு மனுதாரர் ஆகிய நான் தள்ளப்படுவதாக உணர்கிறேன்.

 

இணைப்பு :

1. த.அ.உ சட்டம் 2005 பிரிவு 6 (1) கீழ் __________ அன்று நான் அனுப்பிய மனு நகல்

2. _____________ அன்று பொது தகவல் அலுவலர், மின் பகிர்மானம், தமிழ்நாடு மின்சார வாரியம், திருப்பத்தூர் -630211 அவர்களால் பெற்றுக்கொண்ட ஒப்புகை சீட்டின் நகல்.

 

நாள்  : 01-09-2022

இடம் :                                                  மனுதாரர். 


விதைத்துக் கொண்டே இருப்போம் முளைத்தால் மரம் , இல்லையேல் மண்ணிற்கு உரம்.

பிரகாஷ் - சமூக ஆர்வலர்


மேலும் அறிய இணைந்திடுங்கள் ( LINK BELOW)

டெலிக்ராம்       -     https://t.me/+SXMfwEhx2FdmODRl 

வாட்ஸாப்ப்     -    https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK 

பேஸ்புக்            -   https://www.facebook.com/profile.php?id=100084805683410