கிராம நத்தம் நிலத்தில் இருக்கும் தலையாய பிரச்சினைகளும் அதற்கு தீர்வுகளும்

 


1)காலிநத்தம் என்று வகைபடுத்திவிடுதலை சரி செய்து உரிமையாளர் பெயருக்கு பட்டா வழங்குதல்

 நத்தம் நிலவரி திட்ட சரவே செய்த காலத்தில் தங்கள் நிலங்களை காலிநத்தம்,சரக்கார்,அனாதீனம், புறம்போக்கு என்றெல்லாம் வகைபடுத்திவிட்டு சென்றுவிடுவாரக்ள்

 அதனை நீங்கள பல காலம் கண்டுகொள்ளாமலேயே விட்டு விடலாம்.அநத சொத்தை விற்க போகும்போதோ கட்டிட அனுமதி அல்லது சொத்து கடன் வாங்கும்போது மட்டும்தான் அதனை பார்ப்பார்கள்.

 அப்பொழதுதான் அதனை திருத்தவும் சரி செய யவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்து அலைநது கொண்டு இருப்பர்.

நத்தம் நிலவரி திட்டம் நடப்பதற்கு முன்பே நீங்கள் அநத இடத்தில் சுவாதீனத்தில் இருநதால் அதற்கு உங்களிடம் இருக்கும் பத்திரங்கள் வீட்டு வரிகள் மற்றும் இதர ஆவணங்களை வைத்து கோட்டாச்சுருக்கு மனு செய்ய வேண்டும்.இதற்கென்று புதிய உத்தரவ இருக்கிறது

இதற்கு என்னவெல்லாம் களபணி செய்ய வேண்டும் என்று யுடிஆர் பெயர் திருத்தம் கட்டுரையில் எழுதி இருப்பது இதற்கும் பொருநதும்

 __________________________


ADVERDISEMENT
__________________________


2)காலிநத்தம் என்று வகைபடுத்தி இருக்கும் இடத்தில அதன் பிறகு சுவாதினம் இருநதுவிட்டு பட்டா வேண்டுதல்

பெரும்பாலனா மக்கள் இநத பிரச்சினையிலதான் பாதிக்கபடுகிறாரகள்.இப்படி காலிநத்தம் என்று வகைபடுத்திய பல் இடங்களை அப்பாவி மக்கள் கிரயம் மூலம் வாங்கி இருக்கிறார்கள்.இப்பொழுதான் பத்திரபதிவு துறை காலிநத்ததை பதிவு செய்ய தடை போட்டு இருக்கிறது அப்பொழுது எல்லாம் இநத அளவுக்கு பதிவு துறைக்கு விழிப்பு இல்லாத காரணத்தால் பத்திரம் பதிநது விட்டார்கள்.இப்படி விவரம் நெரியாதவரகள் காலி நத்தம் என்று வகைபடுத்து இருப்பதை வாங்கி இருப்பார்கள் அல்லது இடம் பத்தாமல் குடும்பம் பெரிசாகி காலிநத்தம் இடத்தை சுவாதீன படுத்தி இருப்பாரகள் இப்படி இருக்கின்ற நபரகளுக்கு நத்தம் பட்டா வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்தால் வருவாய்துறை 21 நிலை ஆணையின்படி அதனை ஒப்படை கோரும் இனத்தில் வைத்து அதறகென்று தொகை நிரணயுத்து பட்டா கொடுக்கலாம் அல லது அடுத்த நத்தம் நிலவரிதிட்ட மெகா சரவே வரும்வரை காத்துருக்கலாம்.நான் தான் நத்தம் காலியிடத்தில் சுவாதீனத்தில் இருக்கிறீரகள் என்று மக்கள் நலன் நோக்கி வார்தையை பயன்படுத்திகிறேன்.அரசு உங்களை ஆக்ரமணத்தில் இருப்பதாகவே சொலகிறது எனபதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்

 

3)நத்தம் நிலவரி திட்டத்தில் உருவாக்கபட்ட நத்தம் தூய அடங்கல் சிட்டாக்களில் பெயர் பரப்பு புல எண் பிழைகளை திருத்தல் செய்தல்

பட்டாதார்ர் பெயர் முனீயாண்டி ஆனால் முனுசாமி என்று நத்தம் தூய அடங்கலில்ஆக்கிவிட்டார்கள் நத்தை பெயர் இராஜவேல் ஆனால் வீரவேல் என்று போட்டு விட்டார்கள் சரவே எண் 12 ஆனால் 21 ஆக மாறிவிட்டது பரப்பு குறைநதுவிட்டது என்று பலவேறு பெயர்பிழைகள் ,அளவுபிழைகள,பரப்பு பிழைகள் இருநதால் முறையாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு மனுசெய்து கிராம நிரவாக அதிகாரி,வருவாய் ஆய்வாளர் அறிக்கைகளை பெற்று வட்டாட்சியர் விசாரித்து மாவட்ட வருவாய் அலுவலர் மூலமாக திருத்தல் உத்தரவை பெற்று கிராம கணக்கில் உள்ள நத்தம் பதிவேடுகளில் மாறுதல் செய்ய வைக்க வேண்டும்

 

4)நத்தம் தூய பட்டா ஒருவருக்கு கொடுத்தாயிற்று அநத பட்டா தார்ர் அநத சொத்தை வேறு ஒரு நபருக்கு பாதி இடத்தை விற்றுவிடுகிறார் .பட்டா கொடுக்கபட்ட நத்தம் இடம் பத்திர அலுவலகத்திலும் பதிவாரகள் அதனால் கிரய பத்திரம் பதிநது விடுகிறாரகள்.மேற்படி சொத்து வாங்கிய நபர் நத்தம் பட்டா பெயர் மாற்றத்திருக்கு விண்ணப்பிக்கிறார் .முழு இடமும் வாங்கி இருநதால் முழுபுலத்தில் அப்படியே பெயர் மாறிவிடும் .ஆனால் பாதி இடம் வாங்கி இருப்பதால் நத்தம் இடத்தில் உட்பிரிவு செய்து தனிபட்டா வெட்டி (கூர் செய்து) தரமாட்டாரகள்.வெறுமனே கூட்டுபட்டாவில் பழைய உரிமையாளர் பெயருடன் நங்கள் பெயரையும் சேரத்து தான் தருவாரகள்.ரெகுலர் பட்டாவில் செய்யபடும் உட்பிரிவு இனங்களை போல் நத்தம் பட்டாவில் பட்டா உட்பிரிவு செய்ய இயலாது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.எப்பொழுத நத்தம் எல்லாம் கணிணி மயமாகுதோ கணிணியில் இருநது ஆன்லைன் ஆகுதோ அப்பொழுதுதான் சப்டவிசன் செய்து தனிபட்டா ஆக்க முடியும்.இப்பொழுது ஆக்க முடியுமா என்றால் முடியும் அதற்கு அதிக மெனகெடல் அதிக ஆவண பராமிரிப்பு செய்ய வேண்டும் அதனை செய்ய மாட்டாரகள் எனபதே நமக்கு தெரியுமே!!

 

5)நத்தம் பட்டாவில் உரிமைஅல்லாத நபரின் பெயரை பட்டாவில் நீக்குதல் உரிமை கூறு உள்ளவரை பட்டாவில் சேரத்தல்

உரிமை இல்லாத நபரின் பெயர் நத்தம் பட்டாவில் ஏறி இருக்கிறது அவருக்கு பட்டாவில் பெயர் ஏறியிருக்க கூடாது என்பதற்கான ஆவணங்கள் எல்லாம் உங்களிடம் இருக்கிறது.அல்லது அநத பட்டாவில் உங்கள் பெயரும் இருக்க வேண்டும் அதற்கு அனைத்து உரிமைகூறுகளும் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் கோட்டாச்சிரிடம் மனு செய்ய வேண்டும் அதற்கு பட்டா மாறுதல் மேல்முறையீட்டு மனு என்று சொல்வார்கள்.அநத மனுவின் அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைப்பாணை அனுப்பி வரவழைத்து விசாரணை செய்து பட்டாவில் மாறுதல் மேற்கொள்வார்கள்

 

6)நத்தம் இடம் முழுவதும் இன்று வரை நத்தம் நிலவரி திட்டம் செய்யாமல் வைத்து இருப்பது அதனால் இதுவரை பட்டா கிடைக்காமலேயே இருப்பது

 இது தமிழக அரசின் தவறு 1990 இல் இருநது 1995 வரை நத்தம் நிலவரிதிட்டம் தமிழகம் முழுதும் நடநததாக சொல்லபடிகிறது ஆனாலர உண்மையில் பல கிராமங்களில் நத்தம் நிலவரிதிட்ட சரவே செய்யபடவுல்லை அநத கிராமங்களில் எல்லாம் நத்தம பூரா விஸதீரணமும் அதாவது 200 வீடுகள் இருக்கும் நத்தம் இடத்திற்கு ஒரே சரவே எண் மட்டும் காட்டபடும் எநதவிதமான உட்பிரிவோ எணக்ள அதில் இருக்காது அதில் இருநதே புரிநது கொள்ளலாம் நத்தம் நிலவரிதிட்டம் அநத கிராமத்தில் நடக்கவில்லை என்று இப்படி நடக்காத கிராமங்களில் பலவிதமான நில சிக்கல்ளில் மக்கள் இருப்பாரகள் பட்டா கிடைக்காமல் வீடுகட்டும் கடன் உட்பட எநதவிதாமா வித்தொத்தி தானாதி வினிமைய விக்கிரய பாத்தியங்களை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

இவரகள் கூட்டாக மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் கிராமத்திற்கு நத்தம் நிலவரி திட்ட சர்வேவை செய்து தரும்படி கேட்க வேண்டும்.தொடர் மனு போராட்டங்களையும் தேரத்தல் வாக்குறுதிகளிலும் நத்தம் நிலவரிதிட்டதை சரவேவை மேற்கொள்ள செய்ய வேண்டும்...


விதைத்துக் கொண்டே இருப்போம் முளைத்தால் மரம் , இல்லையேல் மண்ணிற்கு உரம்.


பிரகாஷ் - சமூக ஆர்வலர்


மேலும் அறிய இணைந்திடுங்கள் ( LINK BELOW)

டெலிக்ராம்       -     https://t.me/+SXMfwEhx2FdmODRl 

வாட்ஸாப்ப்     -    https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK 

பேஸ்புக்            -   https://www.facebook.com/profile.php?id=100084805683410